புத்தளம், கல்அடிய வீதியில் விபத்து - ஒருவர் பலி மேலும் இருவர் வைத்தியசாலையில்

புத்தளம், கல்அடிய - பாலவி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நேற்று (02) இரவு 9.10 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கொழும்பு பகுதியை சேர்ந்த 49 வயதுடைய பிரசாத் பெர்னான்டே என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

அதிவேகமாக பயணித்த ஜீப் வண்டியொன்று வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் மதில் ஒன்றில் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தில் காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தளம், கல்அடிய வீதியில் விபத்து - ஒருவர் பலி மேலும் இருவர் வைத்தியசாலையில் புத்தளம், கல்அடிய வீதியில் விபத்து - ஒருவர் பலி மேலும் இருவர் வைத்தியசாலையில் Reviewed by Vanni Express News on 6/04/2018 11:28:00 PM Rating: 5