கொழும்பு - கண்டி பிரதான வீதியின் முச்சக்கர வண்டி விபத்து ஒருவர் பலி

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கரபன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று கோளாறு காரணமாக பாதை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரை கோகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

கோகலை, கடான வீதியை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

விபத்து ஏற்பட்ட பின்னர் முச்சக்கர வண்டி சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன் கோகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் முச்சக்கர வண்டி விபத்து ஒருவர் பலி கொழும்பு - கண்டி பிரதான வீதியின் முச்சக்கர வண்டி விபத்து ஒருவர் பலி Reviewed by Vanni Express News on 6/22/2018 02:56:00 PM Rating: 5