மோட்டார் சைக்கிள் விபத்து இராணுவ அதிகாரி பலி

மஹியங்கன, தெஹியத்தகண்டிய வீதியின் தெல்தெனிய பகுதியில் இன்று (25) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இலங்கை இராணுவத்தின் கதிர்காமம் முகாமில் கடமையாற்றும் கம்மெல்ல, கல்னேவ பகுதியை சேர்ந்த மஹேஷ் பஸ்நாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கிராந்துருகோட்டே பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் விபத்து இராணுவ அதிகாரி பலி மோட்டார் சைக்கிள் விபத்து இராணுவ அதிகாரி பலி Reviewed by Vanni Express News on 6/25/2018 07:01:00 PM Rating: 5