சற்றுமுன் நடந்த கோரவிபத்தில் சிலர் பலி பலர் காயம்

காத்தான்குடியில் இருந்து கொழும்பு சென்ற பஸ், வேன் ஒன்றுடன் இன்று இரவு 11:30 மணியளவில் மோதி விபத்துக்குள்ளாகியதில் பலர் காயமடைந்ததுடன் சிலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

காத்தான்குடியில் இருந்து கொழும்பு சென்ற மஹா எக்ஸ்பிரஸ் பஸ்சே கிரான் ஜங்சனில் ( ஓட்டமாவடி அருகில்) வேன் ஒன்றுடன் விபத்துக்குள்ளாகி உள்ளது. 

வேன் சாரதி உயிரிழந்து இருக்கலாம் எனவும் வேனில்  பயணித்தவர்கள் கடுமையாக காயமடைந்து இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. 

குறிப்பிட்ட பஸ் சில தினங்களாக மிக அதிக வேகத்தில் செல்வதாக குற்றச்சாட்டுகளும் காணப்படுகிரது.
சற்றுமுன் நடந்த கோரவிபத்தில் சிலர் பலி பலர் காயம் சற்றுமுன் நடந்த கோரவிபத்தில் சிலர் பலி பலர் காயம் Reviewed by Vanni Express News on 6/26/2018 01:05:00 AM Rating: 5