புத்தளம் - குருநாகல் வீதியில் கல்லடிய பகுதியில் விபத்து - ஒருவர் பலி

மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். 

புத்தளம் - குருநாகல் வீதியில் கல்லடிய பகுதியிலேயே நேற்று (28) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்தில் மதுரங்குளிய - உனாவேலிய பகுதியை சேர்ந்த அங்கம்பொடி சரத் நந்தசிரி டி சொய்சா என்பரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். 

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர், பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயற்சித்த போது எதிரே வந்த டிப்பருடன் மோதி விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

டிப்பர் வாகனம் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பளதுட்டுள்டன், சம்பவம் தொடர்பில் பிங்கிரிய - தல்கஹபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தளம் - குருநாகல் வீதியில் கல்லடிய பகுதியில் விபத்து - ஒருவர் பலி புத்தளம் - குருநாகல் வீதியில் கல்லடிய பகுதியில் விபத்து - ஒருவர் பலி Reviewed by Vanni Express News on 6/29/2018 03:25:00 PM Rating: 5