விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிகம்

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இவ்வாண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவு கூறியுள்ளது. 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 1330 பேர் உயிரிழந்ததாக அதன் பிரதிப் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டப்ளியூ.டீ.ஏ. தனஞ்சய கூறினார். 

எவ்வாறாயினும் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 1439 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

இதேவேளை வீதி விபத்துக்களுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு விஷேட நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை வகுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சின் விஷேட வைத்தியர் சமித சிறிதுங்க கூறினார்.
விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிகம் விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிகம் Reviewed by Vanni Express News on 6/28/2018 10:52:00 PM Rating: 5