தனியார் பேருந்து ஒன்று எதிர்திசையில் வந்த வேன் ஒன்றுடன் மோதி விபத்து - இருவர் பலி

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியின் 26 ஆவது கிலோ மீற்றர் மைல் கல்லிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். 

தனியார் பேருந்து ஒன்று எதிர்திசையில் வந்த வேன் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தில் வேனின் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த நால்வரையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

25 வயதுடைய ஒருவர் மற்றும் 11 வயதுடைய குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது. 

விபத்துடன் தொடர்புடைய பேருந்து ஓட்டுனர் தப்பிச் சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் பேருந்து ஒன்று எதிர்திசையில் வந்த வேன் ஒன்றுடன் மோதி விபத்து - இருவர் பலி தனியார் பேருந்து ஒன்று எதிர்திசையில் வந்த வேன் ஒன்றுடன் மோதி விபத்து - இருவர் பலி Reviewed by Vanni Express News on 6/26/2018 03:12:00 PM Rating: 5