இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - இருவர் பலி

இன்று (07) காலை நிட்டம்புவ - பஸ்யால பிரதான வீதியின் முருதுவல பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

மாவனல்லையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் கொழும்பில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் மாவனல்லையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தின் பின்னால் உள்ள ஆசனத்தில் அமர்ந்திருந்த இருவர் பலத்த காயங்களுடன் வதுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தில் மாவனல்லை பகுதியை சாமர தனுஷ்க குலரத்ன எனும் 31 வயதுடைய இராணுவ அதிகாரி ஒருவரும், கோகலை பகுதியை சேர்ந்த திலன் சதுரங்க சேனநாயக்க எனும் 22 வயதுடைய ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

சடலங்கள் வதுபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்து தொடர்பில் இரண்டு பேருந்துகளின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நிட்டம்புவ பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - இருவர் பலி இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - இருவர் பலி Reviewed by Vanni Express News on 6/07/2018 02:34:00 PM Rating: 5