கார் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து - கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வைத்தியசாலையில்

பதுளை வின்சென் டயஸ் மைதானத்திற்கு அருகில் இன்று (25) பகல் 1 மணி அளவில் இடம்பெற்ற விபத்தில் 2 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்துள்ளனர். 

கார் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில், அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த 2 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது கார் மோதியுள்ளது. 

இதனால் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் காயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

காரை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, பதுளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கார் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து - கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வைத்தியசாலையில் கார் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து - கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வைத்தியசாலையில் Reviewed by Vanni Express News on 6/25/2018 07:55:00 PM Rating: 5