பேருந்து ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து - ஒருவர் பலி - மூன்று பேர் வைத்தியசாலையில்

கொக்கரெல்ல பகுதில் பேருந்து ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர். 

சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி கொக்கரெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கலேவெல, புவக்பிட்டிய பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் மனைவியும் இரு பிள்ளைகளும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து - ஒருவர் பலி - மூன்று பேர் வைத்தியசாலையில் பேருந்து ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து - ஒருவர் பலி - மூன்று பேர் வைத்தியசாலையில் Reviewed by Vanni Express News on 6/29/2018 05:23:00 PM Rating: 5