நவவி பதவி விலகினார் இஸ்மயில் M.Pயானார்

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி பதவி விலகியதை அடுத்த அந்த பதவிக்காக சீனி எம். மொஹமட் இஸ்மயில் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. 

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்ப்பாக எம்.எச்.எம் நவவி ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம் நவவி மே மாதம் 23 ஆம் திகதி பதவி விலகியதை அடுத்து அந்த பதவிக்கான வெற்றிடத்திற்காக சீனி எம். மொஹமட் இஸ்மயில் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கான நடவடிக்கைகள் நேற்று (06) மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நவவி பதவி விலகினார் இஸ்மயில் M.Pயானார் நவவி பதவி விலகினார் இஸ்மயில் M.Pயானார் Reviewed by Vanni Express News on 6/07/2018 02:11:00 PM Rating: 5