பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி வாக்கெடுப்பின் மூலம் தெரிவு

பாராளுமன்றத்திற்கான பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

ஆனந்த குமாரசிறி 97 வாக்குகளை பெற்றுக் கொண்டதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் கூறினார். 

அதேநேரம் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே 53 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன், ஒரு வாக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்றத்திற்கான பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு இன்று பிற்பகல் இடம்பெற்றது. 

பாராளுமன்றம் இன்று பிற்பகல் 12.00 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. 

பிரதி சபாநாயகர் பதவிக்கு கூட்டு எதிர்க்கட்சி சார்பில் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேயின் பெயர் பிரேரிக்கப்பட்டிருந்ததுடன், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஆனந்த குமாரசிறியின் பெயர் பிரேரிக்கப்பட்டிருந்தது. 

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அந்தப் பதவிக்கு போட்டியிட்டால் வாக்கெடுப்பின் முலம் பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி வாக்கெடுப்பின் மூலம் தெரிவு பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி வாக்கெடுப்பின் மூலம் தெரிவு Reviewed by Vanni Express News on 6/05/2018 10:55:00 PM Rating: 5