இலங்கை ஜனநாயக நாட்டின் ஈழமக்கள் என்பது நமது அடையாளம் அங்கஜன் இராமநாதன்

-வாமதேவன் தயாளன்

இலங்கையராக வடக்கு ,கிழக்கு தமிழர்களின் பூர்வீகம் சார்ந்து ஈழமக்களாக அடையாளப்படுத்தப்படுகிறோம்.இவ்வாறு தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்.கொழும்பில் தனியார் ஊடகமொன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் ஈழம் தொடர்பாக கேள்விஎளுப்பியபோதே நாடாளமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதர்கட்சி தலைவருமான இரா சம்பந்தன் அவர்களும் அவ்வாறே இலங்கை நாட்டவராக கூற்றை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

புலம்பெயர் தேசங்களில் வசிப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கோ,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் தனி நபர்களது சுய நல அடிப்படையிலே முடிவுகள் தன்னிச்சியாக எடுக்கப்படுவதனால் பாதிக்கப்படுவது மக்களே எனவும் குறிப்பிட்டிருந்தார்.

புலம்பெயர் தேசத்தவர்களினால் கட்டவீள்க்கப்பட்டவர்களாக உற்றுநோக்கப்பட்டு கூட்டமைப்பினர் புறம்தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார் தமிழ் வரலாற்றில் வடமராட்சி உடுப்பிட்டி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய சபாநாயகர் சிவா சிதம்பரம் குறித்து கருத்து தெரிவிக்கையில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பாராளமன்ற உறுப்பினராகவும் கட்ச்சியின் உயர் நிலையை வகித்த தமிழ் மகன் கௌரவ சிவசிதம்பரம் அவர்களும் ஜனநாயக பாராளுமன்றில் நடுநிலையாக வகிக்க கூடியவர் என்ற வகையில் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டு, சபாநாயகர் என்ற அந்தஸ்த்தை பெற்றிருந்ததாகவும், அன்று தமிழரசு கட்சியாக செயற்பட்டவர்கள் மக்களின் உரிமைகளுக்காகவும் உணர்வுகளுக்காகவும் கூட்டமைப்பாக ஒன்றிணைந்தாலும் தமிழரசுக்கட்சியின் தனி நபர்களின் சுயநலன் இன்றும் புலப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

தேசமெங்கும் உயர் அந்தஸ்த்துக்களை பெற்று வரும் ஈழத்தமிழர்கள் இலங்கை நாட்டின் நாடாளுமன்றில் நாற்பத்தெட்டு ஆண்டுகளின் பின்பு உயரிய சபையின் அந்தஸ்து பேரம் பேசி வேஷம் போடுபவர்களினால் சோரம் போய்விட்டது எனவும் மக்களின் கனவுகளை மெய்ப்பிக்காமல் மென்வலு குறித்து மெல்லுகிறார்கள். எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எமது வரலாறுகள் தடம் மாறுவதாக தெரிவிப்பவர்கள் அவ் வரலாற்றிலேயே துரோகிகளாகவும், வஞ்சனையாளர்களாகவும் இடம் பிடித்துள்ளனர்.மக்கள் மனங்களில் ஊடுகடத்தப்படுபவர்களாக இளைஞர்களாகிய நாமே இழையோட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

வடக்கின் மக்கள் பிரதிநிதியாக நல்எண்ணங்களுக்காக முன்னுதாரணமாக தொடர்ந்தும் பயணிப்போம்.எமது பொருளாதார வலுவை ஏற்படுத்தி கலை கலாச்சார பாரம்பரியங்களோடு வழுவாமல் காரிருளையும் மழையாக்கி பசுமையான தேசம் நோக்கி படையெடுப்போம்.அப்பொழுது தான் இவர்களின் வேசமும் மௌனமும் கலைக்கப்படும்.
இலங்கை ஜனநாயக நாட்டின் ஈழமக்கள் என்பது நமது அடையாளம் அங்கஜன் இராமநாதன் இலங்கை ஜனநாயக நாட்டின் ஈழமக்கள் என்பது நமது அடையாளம் அங்கஜன் இராமநாதன் Reviewed by Vanni Express News on 6/09/2018 03:26:00 PM Rating: 5