அங்கஜன் இராமநாதனை ஓவியமாக வரைந்த ஓவியர்

-வாமதேவன் தயாளன்

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களை டிஜிட்டல் முறைமையில் ஓவியமாக வரைந்துள்ளார்.

அங்கஜன் இராமநாதன் அவர்களின் நீண்டகால ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் பிரதிசபாநாயகராக பதவியேற்று யாழ்ப்பாணம் வரும் பொழுது தான் வரைந்த ஓவியத்தை வழங்கி வரவேற்க இருந்த நிலையில், மனதால் வரைந்த ஓவியத்திற்கு மட்டுமல்ல மனதிற்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக தெரிவித்தார். கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள காரியாலயத்திற்கு வருகை தந்து ஓவியத்தை வழங்கியிருந்த பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிசிறிபால அவர்களை டிஜிட்டல் முறைமையில் அமைந்த ஓவியம் அவரிடம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அங்கஜன் இராமநாதனை ஓவியமாக வரைந்த ஓவியர் அங்கஜன் இராமநாதனை ஓவியமாக வரைந்த ஓவியர் Reviewed by Vanni Express News on 6/11/2018 11:56:00 PM Rating: 5