துரிதமான நடவடிக்கைகள் மூலம் வன்முறைகளுக்கு முற்று புள்ளி வைக்கப்படும்

-Vamathevan Thayalan

சுழிபுரம் காட்டுப்புலம் பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை சிறுமி ரெஜினா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டமையை கடுமையான முறையில் கண்டித்தார் விவசாய பிரதி அமைச்சர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள்.

அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் கௌரவ சதாசிவம் இராமநாதன் அவர்கள் பாதிக்கப்பட்ட ரெஜினாவின் உறவினர்களை சந்தித்திருந்தார்.

பிரதேச ரீதியாக செயற்படும் அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்துமாறும் உயர் அதிகாரிகளுக்கும்,கட்சியின் இணைப்பாளர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

தொடர்ச்சியாக இடம்பெறும் சம்பவங்களின் காரணமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பிரதேச துறை சார் அதிகாரிகள் கரிசனையுடன் கூடிய கவனம் செலுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

காவல் துறையிடம் இருந்து குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு வழக்கை விசாரிக்க பாரப்படுத்துமாறும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
துரிதமான நடவடிக்கைகள் மூலம் வன்முறைகளுக்கு முற்று புள்ளி வைக்கப்படும் துரிதமான நடவடிக்கைகள் மூலம் வன்முறைகளுக்கு முற்று புள்ளி வைக்கப்படும் Reviewed by Vanni Express News on 6/29/2018 03:36:00 PM Rating: 5