கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

சென்னையில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (28) காலை கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபரிடம் இருந்து சுமார் 7 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களில் 320 கிராம் ஹெரோயின், 52 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 230 கிராம் ஹஷிஸ் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது Reviewed by Vanni Express News on 6/28/2018 09:58:00 PM Rating: 5