காதல் தொடர்பு - பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் காதலன் கைது

இளவயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் தம்பானே பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

14 வருடங்களும் 11 மாத வயதுடைய குறித்த யுவதிக்கு சந்தேகநபருடன் காதல் தொடர்பு இருந்துள்ளதாகவும், குறித்த யுவதி பாட்டியின் வீட்டில் இருந்து சென்று சந்தேகநபரின் அக்காவின் வீட்டில் தங்கியிருந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

அந்த கிராமத்தில் இவர்கள் இருவருக்கும் சம்பிரதாய முறைப்படி வரவேற்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை செய்த முறைப்பாட்டின் படி சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மஹியங்களை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பிததுள்ளனர்.
காதல் தொடர்பு - பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் காதலன் கைது காதல் தொடர்பு - பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் காதலன் கைது Reviewed by Vanni Express News on 6/14/2018 02:40:00 AM Rating: 5