ஆடம்பர ஹோட்டல் போன்று விபச்சார விடுதி - 08 பெண்கள் கைது

ஆடம்பர ஹோட்டல் ஒன்றை போன்று நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று இன்று (20) அதிகாலை வலான மோசடி தடுப்பு பிரிவு அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 

வத்தளை நீதவான் நீதிமன்றத்தால் பெறப்பட்ட தேடுதல் ஆணைக்கு அமைய கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் இந்த விபச்சார விடுதி நடத்திச் செல்லப்பட்டுள்ளது. 

அந்த விபச்சார விடுதியை நடத்திச் சென்ற அதன் முகாமையாளரான 26 வயதுடைய இளைஞர் ஒருவர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார். 

அத்துடன் இந்த விடுதியை நடத்திச் செல்வதற்காக அங்கு தங்கியிருந்து ஒத்துழைப்பு வழங்கிய 08 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொட்டுகொட, சீதுவ, நுவரெலியா மற்றும் கிம்புலாபிட்டிய ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 32 முதல் 36 வயதுடைய பெண்களே இதன்போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபர்கள் இன்று வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆடம்பர ஹோட்டல் போன்று விபச்சார விடுதி - 08 பெண்கள் கைது ஆடம்பர ஹோட்டல் போன்று விபச்சார விடுதி - 08 பெண்கள் கைது Reviewed by Vanni Express News on 6/20/2018 02:44:00 PM Rating: 5