தங்க ஆபரணங்களை உடலில் மறைத்துக் கொண்டு வந்த இலங்கையர் கைது

ஒரு தொகை தங்க ஆபரணங்களை தனது உடலில் மறைத்துக் கொண்டு வந்த இலங்கைப் பிரஜை ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

பத்தரமுல்ல, பெலவத்த பிரதேசத்தைச் ​சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

சிங்கப்பூருக்கு சொந்தமான எஸ்.கியூ - 469 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதுடன், அவர் தனது காற்சட்டை பை மற்றும் சப்பாத்து உரை என்பவற்றில் மறைத்து இந்த தங்க மாலைகளை எடுத்து வந்துள்ளார். 

சுமார் 340 கிராம் நிறையுடைய இவற்றின் பெறுமதி 22,95,000 ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தங்க ஆபரணங்களை உடலில் மறைத்துக் கொண்டு வந்த இலங்கையர் கைது தங்க ஆபரணங்களை உடலில் மறைத்துக் கொண்டு வந்த இலங்கையர் கைது Reviewed by Vanni Express News on 6/23/2018 02:12:00 PM Rating: 5