சிறுத்தையை அடித்து கொலை செய்த இருவர் கைது

கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

நேற்று (23) இரவு அம்பாள்குளம் பகுதியில் வைத்து ஒருவரை கைது செய்துள்ளதுடன் இன்று (24) காலை மற்றுமொருவர் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அம்பாள்குளம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரும் உதயநகர் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுத்தையை அடித்து கொலை செய்த இருவர் கைது சிறுத்தையை அடித்து கொலை செய்த இருவர் கைது Reviewed by Vanni Express News on 6/24/2018 03:40:00 PM Rating: 5