சட்டவிரோதமாக துருக்கி நாட்டிற்குள் நுழைய முற்பட்ட 8 இலங்கையர்கள் கைது

சட்டவிரோதமாக துருக்கி நாட்டிற்குள் நுழைய முற்பட்ட 8 இலங்கையர்கள் ஜோர்ஜியா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

எஜாரா எல்லையில் வைத்து ஜோர்ஜியா பாதுகாப்பு பிரிவினரால் குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவர்கள் ஜோர்ஜியா ஊடாக துருக்கிக்குள் நுழைய முற்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் ஜோர்ஜியா குற்றத்தடுப்பு சட்டத்திற்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

ஜோர்ஜியா நாட்டின் சட்டத்தின் படி இவ்வாறான குற்றங்களுக்காக 4 அல்லது 5 ஆண்டுகள் சிறைத் தண்டைனை வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோதமாக துருக்கி நாட்டிற்குள் நுழைய முற்பட்ட 8 இலங்கையர்கள் கைது சட்டவிரோதமாக துருக்கி நாட்டிற்குள் நுழைய முற்பட்ட 8 இலங்கையர்கள் கைது Reviewed by Vanni Express News on 6/25/2018 05:49:00 PM Rating: 5