கடல் மார்க்கமாக இந்தியாவிற்குள் நுழைந்த இலங்கையர் கைது

கடல் மார்க்கமாக இந்தியாவிற்குள் நுழைந்த இலங்கையர் ஒருவர் ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

ராமேஸ்வரம், உச்சிபுளி அருகே, வலாங்காபுரி கடற்கரைப்பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபருடன் இருந்த மேலும் இருவர் அந்த சந்தர்ப்பத்திலேயே தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தலைமன்னார் பகுதியை சேர்ந்த சகாய ஸ்டீபன் எனும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர் கடந்த செவ்வாய் கிழமை இவ்வாறு இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் சிறிய படகு ஒன்றின் மூலம் இந்தியாவை வந்தடைந்துள்ளதுடன் என்ன காரணத்திற்காக வந்தார் என்பது தொடர்பில் இதுவரையில் இனங்காணப்படவில்லை. 
கடல் மார்க்கமாக இந்தியாவிற்குள் நுழைந்த இலங்கையர் கைது கடல் மார்க்கமாக இந்தியாவிற்குள் நுழைந்த இலங்கையர் கைது Reviewed by Vanni Express News on 6/28/2018 10:17:00 PM Rating: 5