இரத்தினக் கற்களை சட்டவிரோதமாக எடுத்து வந்த வௌிநாட்டுப் பிரஜை கைது

சுமார் 84 இலட்சம் ரூபா மதிப்புடைய இரத்தினக் கற்களை இலங்கைக்கு சட்டவிரோதமாக எடுத்து வந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் டுபாயில் இருந்து மாலைத்தீவு ஊடாக இலங்கைக்கு வந்துள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவு கூறியுள்ளது. 

சந்தேகநபரை சேதனையிட்ட போது அவரிடம் இருந்து 858 இரத்தினக் கற்கள் மீட்கப்பட்டுள்ளன. 

63 வயதுடைய உகண்டா நாட்டுப் பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சுமார் 20 இலட்சம் ரூபா மதிப்புடைய தங்க பிஸ்கட்களை கடத்தி வந்த இலங்கையர் ஒருவரும் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

37 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 03 தங்க பிஸ்கட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவு கூறியுள்ளது.
இரத்தினக் கற்களை சட்டவிரோதமாக எடுத்து வந்த வௌிநாட்டுப் பிரஜை கைது இரத்தினக் கற்களை சட்டவிரோதமாக எடுத்து வந்த வௌிநாட்டுப் பிரஜை கைது Reviewed by Vanni Express News on 6/30/2018 09:38:00 PM Rating: 5