சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் மீண்டும் பகைமையினை ஏற்படுத்த முற்படும் பொறுப்பற்ற ஊடகமும் அதன் பின்னணியும்.

-முகம்மத் இக்பால் சாய்ந்தமருது

ஊடகம் ஒன்று அல் குரானையும், ரசூலுல்லாவையும் தொடர்ந்து விமர்சித்துக்கொண்டே வருகின்றது. அரசியல்வாதிகளுக்காக வரிந்துகட்டுகின்ற நாங்கள் யாரும் இதனை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையை தருகின்றது.

ஊடகங்களில் விமர்சனம் செய்வதை விடுத்து நேரடியாக வந்தால் இஸ்லாமிய மார்க்கம் பற்றிய சந்தேகத்துக்கு தெளிவான விளக்கத்தினை ஆதாரபூர்வமாக காண்பிக்க முடியும். அறியாமையில் இருந்துகொண்டு போலி விமர்சனம் செய்வது அர்த்தமற்றது.

சாதாரண அரசியல்வாதிகளை விமர்சித்தாலே வரிந்துகட்டிக்கொண்டு விளக்கம் தருகின்றறோம். அப்படியான நிலையில் எங்கள் உயிரிலும் மேலான எங்கள் மார்க்கத்தினையும், இறைத்தூதரையும் விமர்சிக்கின்றபோது மௌனமாக இருக்க முடியாது.

காழ்ப்புணர்ச்சிகொண்ட இந்த விமர்சனத்தின் மூலம் குறிப்பிட்ட ஊடகம் எதிர்பார்க்கும் நன்மைகள் என்ன ? அல்லது அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் ? சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் நிரந்தர பகைமையை ஏற்படுத்துவதன் மூலம் அதில் குளிர்காய்வதற்காக பெரும்பான்மை பேரினவாதிகள் இந்த ஊடகத்துக்கு பின்னால் உள்ளார்களா ?

அரசியல் தீர்வினை நோக்கியும், ஒற்றுமையாகவும் இருந்துவருகின்ற சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் குழப்பத்தினையும், நிரந்தர பகமையினையும் ஏற்படுத்துவதற்கான சூழ்ச்சியாக இது இருக்கக்கூடும் என்ற வலுவான சந்தேகம் உள்ளது.

இரு சமூகங்களுக்கிடையில் வன்முறையினை தூண்டுவதற்கு ஒருவர் அல்லது ஓர் ஊடகம் போதுமானது. கடந்தகால வரலாற்றில் நடந்த பல துயரமான சம்பவங்கள் தனி மனிதர் மூலமும், குழுக்கள் மூலமும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு நிரந்தர பகைமையினை ஏற்படுத்தியது.

ஊடகம் என்ற போர்வையில் இஸ்லாமிய மார்க்கத்தினை விமர்சனம் செய்துவருகின்ற இந்த கும்பல்கள் யாரென்றும், அவர்களுக்கு பின்னால் இருந்து செயல்படுகின்ற குழுவினர் அல்லது சக்திகள் யார் என்றும் அறிந்து அவர்களுக்கெதிராக தகுந்த நடவடிக்கை எடுத்து இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

அதற்காக அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தினை இழிவுபடுத்தும் இந்த ஊடகத்துக்கெதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதானது அவர்கள்மீதுள்ள கட்டாய கடமையாகும்.

எனவே இரு சிறுபான்மை சமூகத்தின் தலைமைகள் நிரந்தர அரசியல் தீர்வினை நோக்கி செல்கின்ற காலகட்டத்தில் இவ்வாறான விசமப்பிரச்சாரமானது அரசியல் தீர்வினை குழப்பும் நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது.

சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் மீண்டும் பகைமையினை ஏற்படுத்த முற்படும் பொறுப்பற்ற ஊடகமும் அதன் பின்னணியும். சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் மீண்டும் பகைமையினை ஏற்படுத்த முற்படும் பொறுப்பற்ற ஊடகமும் அதன் பின்னணியும். Reviewed by Vanni Express News on 6/26/2018 05:30:00 PM Rating: 5