திட்டமிட்டு சிதைக்கப்படும் முஸ்லீம் - தமிழ் உறவு

இந்த நாட்டில் மொழியால் இணைக்கப்பட்டு,நிலத் தொடர்பிலும் நெருக்கமாக வாழ்கின்ற தமிழ் மற்றும் முஸ்லீம் உறவுகள் தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகின்றது.

இலங்கை வரலாற்றில் இரண்டு இனங்களுக்கிடையில் கலாச்சார, சமூக கட்டமைப்பு மற்றும் வாழ்வியல் முறைகளில்  பல ஒற்றுமைகள் உள்ளது.இருந்தும் மதக்கோட்பாடு மற்றும் நடமுறை வாழ்வாதார முறையில் பிரத்தியோக வேறுபாடுகள் அடிப்படையிலே உள்ளது.

இலங்கையின் சுதந்திரத்திற்காக இணைந்து போராடி சகோதரத்துவத்தை வளர்த்து வந்த சமூகத்தில் தற்போது பாரிய விரிசல்களும்,மோதல்களும் உருவெடுத்துள்ளது.

ஊடகங்களிலும்,மேடைகளிலும் நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் பேசிக்கொண்டு விஷத்தையும் இனவாதத்தையும் தங்களுக்குள் வளர்த்து வருகின்றனர்.

சர்வதேசத்திடமும்,பராளுமன்றத்திலும் தமிழ் மக்களின் உரிமைக்காகவும் !!முஸ்லீம் மற்றும் சிங்களத் தலமைகளிடமும் தமிழ்-முஸ்லீம் உறவுகளை தமிழ்தலமைகள் பேசுகிறது.

தமிழ் மற்றும் சிங்களத் தலமைகளிடம் இன ஒற்றுமையை வலியுறுத்தி,??முஸ்லீம் மக்களிடம் தனித்துவம் என்ற பெயரில் இனவாத விஷத்தை முஸ்லீம் தலமைகள் பேசுகிறது.

நீண்டகாலமாக ஐதேக மற்றும் ஸ்ரீலசுகட்சிகளில் முஸ்லீம்கள் விசுவாசிகளாக இருந்தனர்.இந்த நேரத்தில் தமிழ் அரசுக்கட்சி உருவானபோது தங்களின் அரசியல் உரிமைக்காக தமிழரசுக் கட்சியில் அஷ்ரப்,மசூர்மௌலான போன்றவர்கள் இணைந்தனர்.

ஆயுதப் போராட்டம் ஆரம்பமானபோது முஸ்லீம்கள் கணிசமானளவு பங்கெடுத்தனர்.முஸ்லீம்கள் விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு அதிகளவில் பணம் மற்றும இதர உதவிகளை வழங்கினர்.

விடுதலைப் போராட்டமும்,தமிழ் அரசியலும் வெளிநாட்டு அடியாளாக மாறத் தொடங்கியதும் விரிசல் ஆரம்பமானது.குறிப்பாக வடகிழக்கில் முஸ்லீம் வியாபாரிகள் கடத்தல்,படித்தவர்கள் கொலை மற்றும் திட்டமிட்டு முஸ்லீம் பிரதேசங்களில் LTTE மற்றும் அவர்களில் இருந்து பிரிந்து போன EROS,EPRLF&EPDPயினரின் அடக்குமுறையால் முஸ்லீம்கள் தங்களின் பாதுகாப்பை உணர ஆரம்பித்தனர்.

இந்தச் சூழ்நிலையில் அரசயல் ரீதியாக பல்வேறு தாக்குதல்கள் மற்றும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மர்ஹீம் அஷ்ரபால் SLMC ஆரம்பிக்கப்பட்டது.அத்துடன் LTTE ல் இருந்து முஸ்லீம்கள் வெளியேறினர்.சிலர் LTTE யாலே கொலை செய்யப்பட்டனர்.

இதற்கு மேலாக வடக்கில் இருந்து ஒரே இரவில் 2 மணித்தயாலய அவகாசத்துடன் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர்.உலகத்தில் மிகமோசமான இனச்சுத்திகரிப்பின் அடையாளமாக அமைந்தது.சஙல உடமைகள் மற்றும் பணங்களை பறிமுதல் செய்து  துரத்தி அடிக்கப்பட்டனர்.

இந்த வரலாற்றுத் தவறுகளுடன் முஸ்லீம்களின் தனித்ததவ அரசியல் வடகிழக்கில் வேகமாக வேரூண்டியது.இது உட்கிடையாக முஸ்லீம்கள் மத்தியில் இனவாதத்தை தீமூட்டி தன்னை வளர்க்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

ஆயுதங்களின் அச்சுறுத்தல் மற்றும் ஐதேக ,ஸ்ரீலசுகட்சிகளின் வங்குரோத்து அரசியலில் இருந்து முஸ்லீம்களின் உரிமை மற்றும் இருப்புக்கான அரசியல் உதயமானது.

விடுதலைப் புலிகள் தங்களின் தவறுகளை ஏற்றுக் கொள்ளவோ அல்லது முஸ்லீம்களுடனான உறவை மீள கட்டமைக்க ஒருபோதும் விரும்பவில்லை.இந்தியா மற்றும் சில சர்வதேச சக்திகளின் தூண்டுதலால் முஸ்லீம்களை அடிமைகளாகவே நடாத்த முற்பட்டனர்.

தங்களின் சுயதேவைக்காக TNA கட்சியை உருவாக்கி கிழக்கில் ஓரளவு எச்சமாக இருந்த தமிழ்-முஸ்லீம் உறவையும் LTTEயினர் விஷமூட்டினர்.இலங்கை-இந்திய ஒப்பந்தம்,பிரேமதாசாவுடனான போர் நிறுத்தம் மற்றும் நோர்வே உடன்படிக்கை போன்றவற்றில் முஸ்லீம்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டனர்.

மேலும் SLMC கட்சியில் உருவான தொடரான பிளவுகள் பல்வேறு பிரதேசக் கட்சிகளை உருவாக்கியது.இதனால் முஸ்லீம் இனவாதம் மேலும் ஒருபடி உயர்ந்து பிரதேசவாதத்துடன் கலந்தது.இது மேலும் தமிழ்-முஸ்லீம் உறவை சிக்கலாக்கியது.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு நல்லாட்சி அரசியல் உருவான போதும் இதில் மாற்றத்தைக் காணமுடியவில்லை.

தமிழ் தலமைகள் வடமாகண காணி விடயத்தை சர்வதேச மட்டம்வரை பேசுகின்றனர்,முறையிடுகின்றனர்..ஆர்ப்பாட்டம் நடாத்துகின்றனர்.ஆனால் தங்களால் துரத்தப்பட்ட முஸ்லீம்களை சொந்தக காணியில் மீள்குடியேறவோ அல்லது வேறுஇடத்தில் குடியமரவோ தடையாக உள்ளது கவலைக்குறியதாகும்.

வடமாகாணசபையில் ஆட்சியை நடாத்தும் தமிழ்தலமைகள் வருடங்களுக்கு மேலாக ஒருமலச கூடத்தைக்கூட முஸ்லீம்களுக்கு வழங்க மறுத்துவருகின்றனர்.நாறாக வடகிழக்கு இணைப்பு என்ற இனவாத புற்றுநோயை உண்டாக்கி,,மக்களை சூன்யமாக்கி வைத்துள்ளனர்.

மறுபுறம் முஸ்லீம் தலமைகளும் தென்கிழக்கு அலகு,கரையோர மாவட்டம்,பிரிந்த கிழக்கு மற்றும முஸ்லீம் முதலமைச்சர் போன்ற கோஷங்களை தேர்தல்கால விஷமூட்டைகளாக வைத்து அரசியல் நடாத்துகின்றனர்.

அத்துடன் கடந்தகாலங்களில் சிங்கள கடும்போக்காளர்களின் வன்முறைகளால் முஸ்லீம்கள் பாரிய துன்பத்தை சந்தித்தனர்.இந்த நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் பங்களியாக இருந்து எதிர்க்கட்சி வேஷம் போட்டுள்ள தமிழ்அரசியல் தலமைகளின் செயற்பாடு கவலைக்குரியது.

கிழக்கில் மதமாற்றம்,நிலா ஆக்கிரமிப்பு,திருகோணமலை ஹபாயா பிரச்சனை மற்றும் வடமாகாணத்தில் மாட்டிறைச்சிக்கு எதிரான போராட்டம் என்பன இன ஒற்றுமையை துண்டாடி உள்ளது.

குறிப்பாக சிங்கள மக்களுடன் இணைந்து அரசியல் மற்றும் சமூக ரீதியில் செயற்படுவதே நீண்டகால பாதுகாப்திற்கு உகந்தது என முஸ்லீம்களை உணரவைத்துள்ளது.குறிப்பாக கிழக்கில் தமிழ் மக்களுடன் இணைந்து  செயற்பட்டால் தங்களுக்கு சகல ரீதியிலும் பாதகமானது என முஸ்லீம்கள் உணரும் நிலை பரவலாகத் தோன்றியுள்ளது.

சர்வதேசத்தையும்,ஆயுதத்தையும், தங்களதத மக்களது முழு ஆதரவையும் நம்பிய LTTE இறுதியில் சாதித்தது என்ன?அப்பாவி மக்களின் உயிர் மற்றும் சொத்து அழிப்பு மற்றும் இனவிரிசல்களை விட்டுச் சென்றதே பாக்கியாகும்.

முஸ்லீம் தலமைகள் தமித்ததவம் என்ற கோஷத்தால் முஸ்லீம்களுக்கிடையில் பிரதேசவாதம்,காட்டிக் கொடுப்பு,பதவிமோகம் மற்றும் தமிழ்மக்கள் மீது குரோதத்தை உரமாக்கியதே சாதனையாகும்.

உண்மையில் சிங்களத் தலமைகள் தமிழ்-முஸ்லீம் உறவுகளை பிரித்து தங்களை பலமாக்குவதில் எப்போதும் குறியாக உள்ளது.ஆனால் இன்று இந் சிறுபான்மை இனத்தின் விரிசல்களுக்கு அரசியல் தலமைகளே முழுப் பொறுப்பையும ஏற்கவேண்டும்.

கடந்த கிழக்குமாகாணசபை ஆட்சியமைப்பு முதல் அண்மைக்கால உள்ளூராட்சி சபைகளில் இரண்டு இனஅரசியல் தலமைகளும் பல்வேறு இணக்கப்பாடுகளை உருவாக்கியது.மாறாக இந்த சமூகங்களில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை உருவாக்கும் எந்தவிதமான செயற்பாடுகளையும் எந்த அரசசயல் தலமைகளும் முன்னெடுக்கவில்லை.

காரணம் தேர்தல் இனவாதத்தை விதைத்தே கட்சிகள் தங்களுக்குரிய வாக்கு வங்கியை இரண்டு இனதலமைகளும் நிரப்புகின்றது.இந்த சமூகத்தில் நல்லிணக்கம் உருவானால் இரண்டு இனம்சார்பான கட்சிகளுக்கு தேர்தலில் தோல்வி நிச்சயமாகும்.

தமிழ் முதலமைச்சர் V முஸ்லீம் முதலமைச்சர் என்ற கோஷத்தை உருவாக்குகின்றனர்.தனியாக எவராலும் கிழக்கில் முதலமைச்சராக முடியாது என்பதே யதார்த்தம்.இருந்தும் இந்தக் கோஷத்தால் அதிக ஆசனங்களைப் பெறுகின்றனர்.பின்னர் சேர்ந்து ஆட்சி அமைக்கின்றனர். நல்லிணக்கத்தை வாயப்பேச்சாக வைத்து அதிகாரத்தை நடாத்துகின்றனர்.

அத்துடன் தற்போது சக்தி TV,தினக்குரல்,உதயன் மற்றும் வீரகேசரி பத்தரிகைகளும் சில மதச்சார்பு நிபுவனங்களும் இந்திய புலனாய்வு மற்றும் சிவசேன உதவியுடன் முஸ்லீம்களுக்கு எதிராக கூட்டமைத்துள்ளது அபாயகரமாகும்

தற்போதைய ஆட்சியில் ரணிலை வைத்து எதையும் செய்ய முடியும்,பேச முடியும் என்றால் முட்டாள்தன கணக்கை,,முதிர்ச்சியான சம்பந்தர் ஐயா நகர்த்துவது மேலும் பரஸ்பர உறவை துண்டாடி உள்ளது.திருகோணமலை அபாயா  விடயத்தில் தமிழ்தலமைகள் வேடிக்கை பார்தத்தும்,முஸ்லீம் தலமைகள் மௌனம் சாதித்ததும் முஸ்லீம்கள் மத்தியில் பாரிய அபாய எச்சரிக்கையை ருவாக்கி உள்ளது.

அரசாங்கம் எதிர்காலத்தில் மாற்றம் கண்டால் TNA மீண்டும் ஆர்ப்பாட்டம் மற்றும் சர்வதேசம் என்று பழைய கதையை புதுப்பிக்க நேரிடலாம்.TNAவைத்து சர்வதேசத்தின் கடிவாளத்தை ரணில் அகற்றிவிட்டார்.ஆதலால் தமிழ்தலமைகளை பல் எடுத்த பாம்பாக தூக்கிவீசும் காலம் வெகுதூரமில்லை.அப்போது முஸ்லீம்களின் தேவையும்,ஆதரவும் அவசியப்படலாம்.

ஆகவே இரண்டு சமூகத்திடம் அடிப்படையாக உள்ள பாரம்பரிய நெருக்கம் புதுப்திக்கப்பட வேண்டும்.இதற்காக மதநிறுவனங்கள்,சமூ அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகள் இன ஒருமைப்பாடுடான புரிந்தணர்வு வேளைத் திட்டங்களை கிராம மட்டத்தில் இருந்து முன்னெடுக்க வேண்டும்.

ஆகவே இருபக்க நியாயங்களை திரிபுபடுத்தி எதிர்கால உறவை சீர்குழைக்க முடியாது.இருதரப்பும் விட்டுக் கொடுப்பு மற்றும் திறந்த மனதுடன் வெளிப்படையாக பேசவேண்டும்.குறிப்பாக நாட்டுக்குஎடிராக போராடியவர்கள்,தங்களின் உறவுகளையும் தலைவர்களையும் கொலை செய்தவர்,நாட்டை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுத்தவர்கள் என்ற பலமான விதை சிங்கள மக்களிடம் வேரூண்டி உள்ளது.இது பலதலமுறைக்கும் தமிழர்களுக்கு சிங்கள மக்களுடனான உறவுக்கு சவாலாகவே இருக்கும்.ஆதலால் ஒப்பீட்டளவில் முஸ்லீம் மக்களுக்கு ஏற்படுத்திய துன்பங்களும் அதிகமே.ஆதலால் தமிழ் மக்களும் தலமைகளும் இதுவிடயத்தில் முதன்நிலையான நகர்வை மேற்கொள்வது ஆரோக்கியமாகும்.

உண்மையில் தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு என்பது முஸ்லீம்களுடடான உறவிலே தங்கியுள்ளது.அதேநேரம் முஸறலீம்களின கிழக்கில் தனித்துவமான அரசியல் தமிழ் மக்களின் ஒத்துழைப்புடனே முன்னெடுக்கப்படுவது ஆரோக்கியமானது.
திட்டமிட்டு சிதைக்கப்படும் முஸ்லீம் - தமிழ் உறவு திட்டமிட்டு சிதைக்கப்படும் முஸ்லீம் - தமிழ் உறவு Reviewed by Vanni Express News on 6/20/2018 04:30:00 PM Rating: 5