முஸ்லிம்கள் குர்ஆனை நம்புகின்றவர்கள். அவர்களை ஏமாற்றி எப்படி ஆட்சி பீடம் ஏறினார்கள் ?

-அஹமட் புர்க்கான் கல்முனை

மஹிந்தவுக்கும் ஞானசாரவுக்கும் எதுவித தொடர்புமில்லை என்ற பலநாள் உண்மையை நாம் மக்கள் மத்தியில் தொடர்ந்து கூறிய போதும் எம்மையும், எமது கருத்தையும் தூற்றியவர்கள்.
இன்று ஞானசாரவின் பாலிய நண்பர்கள் யார் என்பதை இனம் கண்டு கொள்கின்றனர்.

ஞானசாரவை சிறையில் அடைத்ததில் இருந்து அவரை யார்? யார்? சந்திக்க சென்றுள்ளனர். யார்? யார்? ஞானசாரவுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். என்பதை நம்மவர்களில் பலர் இப்போது செய்தித் தளங்கள் ஊடாக பார்க்கிறார்கள்.

நல்லாட்சியின் பங்காளிகளில் பெரும்பாலானவர்களே ஞானசாரவின் நண்பர்கள் என்பது இப்போதாவது முஸ்லிம்களுக்கு புரியவில்லை என்றால் இதற்கு மேல் எம்மால் எதுவும் சொல்ல முடியாது.

நான் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்திக்கின்ற போதல்லாம் முஸ்லிம் சமூகம் தொடர்பில் பல விடயங்களை எத்திவைப்பேன்.
ஒரு கட்டத்தில் "நான் உணர்ச்சி வசப்பட்டு" மூன்று தசாப்த காலமாக நாட்டை அச்சுறுத்திய பயங்கரவாத புலிகளையும் அழித்து பிரபாகரனில் மன்டைஓட்டை பிளந்து பார்த்த உங்கள் அரசை காட்ஸ்  கூட்டத்தில் வரும் ஜோக்கரைப் போல் வந்த ஞானசார கவிழ்த்துவிட்டார் என்று கூறினேன்.

அவர் அது அத்தனையையும் அமைதியாக கேட்டுவிட்டு என்னிடம் கூறினார்.

புர்க்கான் எனக்கு முஸ்லிம்கள் மீது எந்த கோபமும் இல்லை, எனது ஆட்சியை தோற்கடித்ததாக முஸ்லிம்கள் சந்தோசப்படுகிறார்கள்.

ஆனால், உண்மையில் அவர்கள் இப்போது இந்த ஆட்சியில் முழுப் பாதுகாப்பையும் இழந்து விட்டார்கள். அதனால்தான் அடிக்கடி அவர்கள் மீது அத்துமீறல் இடம்பெறுகிறது.

கண்ணை விற்று ஓவியம் வாங்கியது போலவே. முஸ்லிம்கள் நல்லாட்சியை கொண்டுவர என்னை நிராகரித்தார்கள் என்று கூறுவார். முஸ்லிம்கள் விடயத்தில் நான் கவலைப்படுவது அவர்களுக்கு தெரியாது. வெளிநாடுகளிலும் கூட இன்று முஸ்லிம்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

எனது ஆட்சியில் கூட முஸ்லிம்களை அச்சுறுத்த பலர் திட்டமிட்டார்கள் நான் அதனை சமயோசிதமாக கையாண்டேன் மேலும் அது போன்றதொரு அசம்பாவிதம் நடைபெறக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன்.

இதில் எனது தவறு எதுவுமில்லை, என்னோடு இருந்து கொண்டு இரட்டை வேடம் பூண்ட சில கயவர்களின் சதி என்பதை நானும் பின்னாளில் தெரிந்து கொண்டேன்.

முஸ்லிம்கள்  குர்ஆனை நம்புகின்றவர்கள். அவர்களை இவர்கள் எப்படி ஏமாற்றி ஆட்சி பீடம் ஏறினார்கள் என்பதுதான் எனக்கு புரியவில்லை என்பார்.

ஒரு சமயத்தில் சொல்லும் போது நீங்கள் வணங்கும் அல்லாஹ், நான் யார் என்பது பற்றியும் நல்லாட்சிக்காரர்கள் யார் என்பது பற்றியும் நிச்சயமாக உங்களுக்கு மிக விரைவில் காட்டுவார் என்றார்.

மற்றுமொரு சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் என்னை எதிரியாக பார்க்க, முஸ்லிம் அரசியல் தலைவர்களே காரணம். அவர்கள் அவர்களுடைய அரசியலுக்காக உண்மைகளை மறைத்துவிட்டார்கள். அதன் விளைவை முஸ்லிம்கள் இப்போது அனுபவிக்கிறார்கள் என்றார்.

எமது ஆட்சி மலரும்போது இந்த நல்லாட்சியில் உள்ள முக்கியஷ்தவர்கள் பலர் மக்கள் மத்தியில் உண்மையை சொல்லி மன்னிப்பு கோரியே ஆகவேண்டும்.

அதுவரை அவர்களை நாம் விடப்போவதில்லை என கூறானார்.
முஸ்லிம்கள் குர்ஆனை நம்புகின்றவர்கள். அவர்களை ஏமாற்றி எப்படி ஆட்சி பீடம் ஏறினார்கள் ? முஸ்லிம்கள் குர்ஆனை நம்புகின்றவர்கள். அவர்களை ஏமாற்றி எப்படி ஆட்சி பீடம் ஏறினார்கள் ? Reviewed by Vanni Express News on 6/21/2018 03:34:00 PM Rating: 5