தீபகற்பம் தீவாகிறது. வலுக்கும் மத்திய கிழக்கின் பிரிவினை

-அனீஸ் அலி முஹம்மத் கத்தாரிலிருந்து

சவூதி அரேபியா நாட்டின் அண்டை நாடான கத்தாரை ஒரு கால்வாயைத் திறப்பதன் மூலம் தனிமைப்படுத்துவதற்கு சவூதி அரேபியா திட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறது. தீபகற்பமாக இருக்கின்ற ஒரு நாட்டை இடையே கால்வாயைத் தோண்டி அதனை தனிமைப்படுத்த எண்ணுவது உலக அரங்கிலும் மத்திய கிழக்கிலும் சில கருத்தாடல்களைத் தோற்றுவித்துள்ளது. இது மிகவும் விவாதிக்கப்பட வேண்டிய மற்றும் மத்திய கிழக்கில் பேசு பொருளாகியுள்ள ஒரு விடயமாகும்.

ஜூன் மாதம் 25 ம் திகதி செவ்வாயன்று சவூதியின் தலை நகரான ரியாதில் நடைபெற்ற மாநாட்டில் "சல்வா கால்வாய்" திட்டத்திற்கான முயற்சிகளுக்கான தினம் அறிவிக்கப்படும் என்று சவூதி அரசு அறிவித்துள்ளது. இது கத்தார் நாட்டிலிருந்து 60 கிமீ எல்லைகளைக் கொண்டிருக்கும்.

ஐந்து புகழ்பெற்ற கால்வாய் தோண்டும் நிறுவனங்கள் ஏற்கனவே இத்திட்டத்திற்கு போட்டியிட அழைக்கப்பட்டன. இந்த திட்டத்தின் வெற்றியாளர் 90 நாட்களுக்கு பிறகு அறிவிக்கப்படுவர் எனவும் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தனியார் முதலீட்டாளர்களால் முழுமையாக ($ 750 மில்லியன்) நிதியளிக்கப்படக்கூடிய 60 கிலோமீட்டர் (37.5 மைல்) நீளமும் 200 மீட்டர் (219 கெஜம்) அகலமும் இந்த சல்வா கால்வாய் திட்டம் கொண்டிருக்கும். எகிப்திய நிறுவனங்கள் சுயேஸ் கால்வாய் விரிவடைந்தது பற்றிய அறிவைப் பயன்படுத்தி இந்த திட்டத்தை செயற்படுத்தும்.

இந்தத் திட்டம் சவுதி அரேபிய தளத்தையும், கால்வாயின் Qatari பக்கத்தில் அணுசக்தி கழிவுகளையும் நிறுவ திட்டமிட்டுள்ளது.

சவுதி அரேபியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் உள்ள தொடர்பை கத்தாரிலிருந்து முற்றாக இல்லாது செய்து தனிமைப்படுத்த முயல்கின்ற ஒரு வழிவகையாக இந்த நியாயமற்ற நடவடிக்கை பரந்த அளவில் கண்டனம் செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 5, 2017 ல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து மற்றும் பஹ்ரைன் நாடுகள் கத்தார் அரசின் மீது பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்காக குற்றம் சாட்டி, பொதுவாக ஈரானுடன் நட்புறவைப் பேணி வருவதாக கத்தார் மீது சட்டவிரோதமாக தடை விதித்தது. அதன் பிறகு சவூதி கத்தாருக்கான அதன் ஒரே எல்லையையும் நிரந்தரமாக மூடியது.
தீபகற்பம் தீவாகிறது. வலுக்கும் மத்திய கிழக்கின் பிரிவினை தீபகற்பம் தீவாகிறது. வலுக்கும் மத்திய கிழக்கின் பிரிவினை Reviewed by Vanni Express News on 6/22/2018 03:59:00 PM Rating: 5