ஒர் ஏழையின் ஜனாஸா என்பதால் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை ? இது மடவலையில்

வெறும் ஐந்து பேர் மட்டுமே கலந்து கொண்ட ஜனாஸா - மடவலையில்

ஒர் ஏழையின் ஜனாஸா என்பதால் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை. வெறும் ஐந்து பேர் மட்டுமே !

அல்லாஹ்வால் படைக்கப்பட்ட உயரினங்கள் அனைத்துக்கும் மரணம் என்பது நிச்சயமான ஒன்றாகும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

‘நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும். (அல்குர்ஆன் 4:78)

மடவலையில் ஒரு முஸ்லீம் சகோதரனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள ஏனோ சகோதரர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பது எங்கள் ஒற்றுமையின் விரிசலைக்காட்டி நிற்பதை அறிந்துகொள்வோம் .

அன்பான சகோதரர்களே வானுயர மினாராக்களை எழுப்புவதும் ஒன்றுக்கு பத்து மஸ்ஜிதுகளை கட்டுவதும் எம்மத்தியில் ஒற்றுமையை கொண்டுவராது என்பதை இந்தஜனாஸா சொல்லிச்சென்றது .

முல்லாக்கள் எங்களை ஒற்றுமை படுத்தினார்களா இல்லை ஜமாத்துகளாக பிரிந்துவிட்டோமா ?
மடவளை சகோதரர்கள் பதில்கூற கடமைப்பட்டுள்ளார்கள் .

இங்கே குளம் கோத்திரம் பார்த்திர்களா ?
இல்லை பணக்காரன் ஏழை என்று வேற்றுமை பார்த்திங்களா ?
இல்லை உலமாக்கள் உபதேசங்கள் உயிரோட்டம் இல்லையா ?

இறந்துவிட்டவரின் குடும்பத்தினருக்கு நெருங்கிய உறவினர்களோ அண்டை வீட்டாரோ உணவு சமைத்து இறந்தவரின் குடும்பத்தாருக்கு கொடுக்க வேண்டும். அவர்களுக்கு ஆறுதல் கூறி உணவு உண்ணச் செய்ய வேண்டும். இதுவே நபி வழியாகும்.இதை உலமாக்கள் உபதேசிக்கவில்லையா ?

முஸ்லிம்களாகிய நமக்கு மற்றவர்கள் மீது குறிப்பிட்ட உரிமைகள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரிந்திருந்தால், அவற்றை உங்கள் தினசரி வாழ்வில் உங்களால் இயன்ற அளவு சிறப்பாக நிறைவேற்றுகிறீர்களா?
ஒரு முஸ்லிமின் ஜனாஸாவில் கலந்து கொள்ளுங்கள்

இதுவும் ஒரு சமுதாயக் கடமை. ஆனால், அதிலுள்ள ஏராளமான நற்கூலிகளை நினைவில் கொண்டு அதில் கலந்து கொள்ள நீங்கள் உற்சாகம் பெற வேண்டும்.“ஜனாஸா

(பிரேத)த்தொழுகையில்பங்கேற்றஒருவர் (அதைஅடக்கம்செய்யும்வரை) பின்தொடர்ந்துசெல்லவில்லையானால், அவருக்குஒரு‘கீராத்” (நன்மையே) உண்டு; அதை (அடக்கம்செய்யும்வரை) பின்தொடர்ந்தால்அவருக்குஇரண்டு “கீராத்“கள் (நன்மை) உண்டு” எனநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அப்போது “இரண்டு “கீராத்“கள்என்றால்என்ன?” என்றுவினவப்பட்டது. அதற்குஅவர்கள் “இரண்டு “கீராத்“களில்மிகச்சிறியஅளவு, உஹுத்மலைஅளவாகும்” என்றுவிடையளித்தார்கள். [புகாரி]

குறிப்பு: ஜனாஸா தொழுவதின் நன்மை ஆண்கள், பெண்கள் இருவருக்கும் உண்டு. ஆனால், பெண்கள் ஜனாஸா ஊர்வலத்தைப் பின்தொடரக் கூடாது.செயல்: ஜனாஸா தொழுகை தொழும் முறையைக் கற்றுக் கொண்டு, உங்கள் பகுதியில் ஜனாஸாவைப் பற்றி அறியும்போது தொழுகையில் கலந்து கொள்ளுங்கள். மேலும், அச்செய்தியை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். 

அதனால் இறந்தவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும், ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்பவருக்கும் உதவியாக இருக்கும். . எத்தனை அதிகமான மூஃமின்கள் இறந்து போனவருக்காக துஆ செய்கிறார்களோ அத்தனை நல்லது. மரணச் செய்தியைக் கேட்டவுடன், இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜி’ஊன். (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கு உரியவர்கள் அவனிடமே நாம் திரும்ப வேண்டியுள்ளது) [அல் குர்’ஆன் 2:156] என்று கூறுங்கள்.

நபி (ஸல்) அவர்கள், கூறினார்கள்: ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிம் மேல் ஐந்து உரிமைகள் உள்ளன. அவர் ஸலாம் கூறினால், பதில் கூறுதல், அவர் நோயுற்றிருந்தால் பார்க்கச் செல்லுதல், அவர் மரணமடைந்தால் ஜனாஸாவில் கலந்து கொள்ளுதல், அவருடைய அழைப்பை ஏற்றுக் கொள்ளுதல், அவர் தும்மினால் ‘யர்ஹமுக் அல்லாஹ்’ (அல்லாஹ் உங்கள் மீது கருணை காட்டுவானாக) என கூறுதல். [புகாரி, முஸ்லிம்]


வீடியோவை பார்வையிட கிழே அழுத்துங்கள்   https://www.facebook.com/VanniExpressNews/videos/2078677532371076/
ஒர் ஏழையின் ஜனாஸா என்பதால் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை ? இது மடவலையில் ஒர் ஏழையின் ஜனாஸா என்பதால் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை ? இது மடவலையில் Reviewed by Vanni Express News on 6/27/2018 02:28:00 AM Rating: 5