ஜனாதிபதி மீது வெடிகுண்டு தாக்குதல் உயிரை காப்பாற்றிய பாதுகாவலர்கள்

சிம்பாப்வே நாட்டில் ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. பிரதான வேட்பாளர்களிடையே பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள புலாவாயோ நகரில் இன்று தேர்தல் பிரசார கூட்டம் ஒன்று நடைபெற்றது. 

இதில் ஜனாதிபதி எம்மர்சன் ம்நான்காவா உரையாற்றினார். அவரது உரையை கேட்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். 

உரையை முடித்துவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கிய போது எம்மர்சன் ம்நான்காவாவை நோக்கி ஒரு வெடிகுண்டு வீசப்பட்டது. 

வெடிகுண்டு ஜனாதிபதி மீது படாத வகையில் அவரது பாதுகாவலர்கள் அவரை ஒரு பக்கமாக இழுத்து தள்ளி, எம்மர்சன் ம்நான்காவாவின் உயிரை காப்பாற்றியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

மேலும், இந்த தாக்குதலில் சிலர் காயம் அடைந்ததாகவும் தலைநகர் ஹராரேவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
ஜனாதிபதி மீது வெடிகுண்டு தாக்குதல் உயிரை காப்பாற்றிய பாதுகாவலர்கள் ஜனாதிபதி மீது வெடிகுண்டு தாக்குதல் உயிரை காப்பாற்றிய பாதுகாவலர்கள் Reviewed by Vanni Express News on 6/23/2018 11:32:00 PM Rating: 5