திடீரென நாடு திரும்பும் மெத்திவ்ஸ் மற்றும் லஹிரு காரணம் என்ன ?

மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் வீரர்களான அஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் லஹிரு கமகே ஆகியோர் போட்டியில் இருந்து விலகி இன்று நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனிப்பட்ட காரணங்களுக்காக மெத்திவ்ஸ் நாடு திரும்புவதாகவும், லஹிரு கமகே உபாதை காரணமாக நாடு திரும்புவதாகவும் இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இதன் காரணமாக நாளை ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் லஹிரு கமகே ஆகியோர் விளையாடமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்களுக்கு பதிலாக தசுன் சானக மற்றும் தனுஷ்க குணதிலக ஆகிய வீரர்கள் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். 

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, டெஸ்ட் கிரிக்கட் தொடரில் விளையாடி வருகின்றது. 

முதல் போட்டி முடிவடைந்துள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலையில் உள்ளது.
திடீரென நாடு திரும்பும் மெத்திவ்ஸ் மற்றும் லஹிரு காரணம் என்ன ? திடீரென நாடு திரும்பும் மெத்திவ்ஸ் மற்றும் லஹிரு காரணம் என்ன ? Reviewed by Vanni Express News on 6/14/2018 02:22:00 AM Rating: 5