நடுவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக மேன்முறையீடு செய்த தினேஷ் சந்திமால்

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் தினேஷ் சந்திமாலுக்கு எதிராக நடுவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார். 

இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தின் போது பந்தை சேதப்படுத்தியதாக தினேஷ் சந்திமால் மீது நடுவரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக தினேஷ் சந்திமாலுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், போட்டிக்கான பணத்தில் 100 வீதத்தை தண்டப் பணமாக செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடுவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக மேன்முறையீடு செய்த தினேஷ் சந்திமால் நடுவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக மேன்முறையீடு செய்த தினேஷ் சந்திமால் Reviewed by Vanni Express News on 6/21/2018 04:10:00 PM Rating: 5