மலசலகூட குழிக்குள் விழுந்து இரண்டு பேர் பலி

அரநாயக்க பிரதேசத்தில் மலசலகூட குழிக்குள் விழுந்து இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். 

இன்று (21) காலை வீட்டிற்கு அருகில் இருந்த மலசலகூட குழிக்குள் ஒருவர் விழுந்துள்ளதையடுத்து அவரை காப்பாற்றச் சென்ற மற்றைய நபரும் அந்தக் குழிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார். 

அரநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயது மற்றும் 34 வயதுடைய இரண்டு பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

சடலங்கள் தற்போது அரநாயக்க வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அரநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மலசலகூட குழிக்குள் விழுந்து இரண்டு பேர் பலி மலசலகூட குழிக்குள் விழுந்து இரண்டு பேர் பலி Reviewed by Vanni Express News on 6/21/2018 03:44:00 PM Rating: 5