விமானத்திற்குள் உயிரிழந்த பாகிஸ்தான் நாட்டு பெண் நீசா எலிமுன்

விமானத்திற்குள் உயிரிழந்த பாகிஸ்தான் நாட்டு பெண்ணின் பிரேத பரிசோதனைகள் இன்று (24) நடைபெற உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சிங்கப்பூரில் இருந்து வந்த யூ.எல் 306 என்ற விமானத்திலேயே குறித்த பெண் உயிரிழந்து இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

86 வயதுடைய நீசா எலிமுன் எனும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த பெண்ணின் சடலம் நீர்கொழும் வைத்தியசாலையில் ​வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் விமான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விமானத்திற்குள் உயிரிழந்த பாகிஸ்தான் நாட்டு பெண் நீசா எலிமுன் விமானத்திற்குள் உயிரிழந்த பாகிஸ்தான் நாட்டு பெண் நீசா எலிமுன் Reviewed by Vanni Express News on 6/24/2018 03:53:00 PM Rating: 5