காட்டு யானை தாக்கியதால் பெண் ஒருவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலி

காட்டு யானை ஒன்று தாக்கியதால் படுகாயமடைந்து பெண் ஒருவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

இன்று (29) அதிகாலை இந்த காட்டு யானைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்தவர் கொட்டுகச்சிய - கந்தயாய பகுதியை சேர்ந்த 69 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

அதிகாலையில் எழுந்து வீட்டு வேலைகளை செய்த பின்னர் காலை உணவை தாயார் செய்யும் போதே குறித்த பெண் யானை தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார். 

உயிரிழந்த பெண் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று நடைபெற உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காட்டு யானை தாக்கியதால் பெண் ஒருவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலி காட்டு யானை தாக்கியதால் பெண் ஒருவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலி Reviewed by Vanni Express News on 6/29/2018 03:47:00 PM Rating: 5