பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து இரண்டு வயது ஆண் குழந்தை பலி

கிரிபாவ - இராஜாங்கணை பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து 2 வயதுடைய ஆண் குழந்தையொன்று இன்று முற்பகல் உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை தனது தாயுடன் உறவினரொருவரின் வீட்டுக்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் , குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள இராஜாங்கணை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் , குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் சடலம் அனுராதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் , கிரிபாவ காவற்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து இரண்டு வயது ஆண் குழந்தை பலி பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து இரண்டு வயது ஆண் குழந்தை பலி Reviewed by Vanni Express News on 6/22/2018 10:56:00 PM Rating: 5