பிரதியமைச்சரை யானை தாக்க முயற்சித்த சம்பவம்

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க சென்ற வனஜீவராசிகள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும மீது அந்த யானை தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

திம்புலாகல, நவமில்லான, இத்தபிச்சவெவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சுமார் 100 மீற்றர் தூரம் வரை பிரதியமைச்சரையும் சிகிச்சையளிக்க சென்ற குழுவினரையும் அந்த யானை துரத்தியுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். 

அதன்பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் வைத்தியர்களும் இணைந்து அந்த யானைக்கு தேவையான சிகிச்சையை செய்துள்ளனர்.
பிரதியமைச்சரை யானை தாக்க முயற்சித்த சம்பவம் பிரதியமைச்சரை யானை தாக்க முயற்சித்த சம்பவம் Reviewed by Vanni Express News on 6/30/2018 11:43:00 PM Rating: 5