க.பொ.த உயர் தரத்திற்கு உயர்ந்தோரையும் உயர்த்தியோரையும் பாராட்டும் நிகழ்வு

-அப்துல் ஹமீட் 

அட்டாளைச்சேனை அறபாவின் சுவடுகள் 2018 க.பொ.த உயர் தரத்திற்கு உயர்ந்தோரையும் உயர்த்தியோரையும் பாராட்டும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் நேற்று (26) இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரும், நட்சத்திர அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஜெமிலா ஹமீட் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும், அதிபர்களும், ஆசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின்போது நாட்டார் பாடல் பாடிய மாணவ மாணவிகளுக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஜெமிலா ஹமீட் தனது சொந்த நிதியிலிருந்து ஒரு தொகை பணப்பரிசில்களை வழங்கி அம்மாணவர்களை பாராட்டி கௌரவித்தார். 

இந்நிகழ்வில் சித்தியடைந்த மாணவர்களையும், இதற்குக் காரணமாக அமைந்த ஆசிரியர்களையும் பாராட்டி பரிசில்களையும், ஞாபகச் சின்னங்களை அதிதிகளினால் வழங்கி 
வைக்கப்பட்டது.

மேலும், இதன்போது பாடசாலை அதிபர் எம்.ஏ.அன்ஸாரினால் முன்னாள் கிழக்குமாகாண அமைச்சரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பையை பாராட்டி கொளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 
க.பொ.த உயர் தரத்திற்கு உயர்ந்தோரையும் உயர்த்தியோரையும் பாராட்டும் நிகழ்வு க.பொ.த உயர் தரத்திற்கு உயர்ந்தோரையும் உயர்த்தியோரையும் பாராட்டும் நிகழ்வு Reviewed by Vanni Express News on 6/27/2018 01:38:00 AM Rating: 5