போலி விசா உள்ளிட்ட ஆவணங்களை தயாரிக்கும் நிலையம் சுற்றிவளைப்பு

போலி விசா உள்ளிட்ட ஆவணங்களை தயாரிக்கும் நிலையமொன்று நீர்கொழும்பு பொலிஸ் விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 

ஐரோப்பா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கான போலி விசா இந்த நிலையத்தில் தயாரிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நீர்கொழும்பு, வெல்லவீதிய, கீர்த்திசிங்க பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த போலி நிலையம் இயங்கியுள்ளது. 

நீர்கொழும்பு பொலிஸ் விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளதுடன், இத்தாலி, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்புவதற்காக போலியாக தயாரிக்கப்பட்ட விசா உள்ளிட்ட ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சுற்றிவளைப்பின் போது வீட்டில் இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அத்துடன், நீர்கொழும்பு முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அனுப்புவதற்கு வைத்திருந்த சில கடிதங்களும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
போலி விசா உள்ளிட்ட ஆவணங்களை தயாரிக்கும் நிலையம் சுற்றிவளைப்பு போலி விசா உள்ளிட்ட ஆவணங்களை தயாரிக்கும் நிலையம் சுற்றிவளைப்பு Reviewed by Vanni Express News on 6/21/2018 11:08:00 PM Rating: 5