எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து - முழுமையாக எரிந்து சாம்பல் ஆகியது

வவுனியா, வைரவ புளியங்குளம் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தொழிற்சாலை முழுவதுமாக எரிந்து சாம்பல் ஆகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை ஒன்றிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மின் ஒழுக்கின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை என்பதால் தீ வேகமாக பரவியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தொழிற்சாலையில் பல இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் அழிவடைந்துள்ளதுடன் ஏற்பட்ட நட்டம் தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வவுனியா நகர சபை தீ அணைப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து - முழுமையாக எரிந்து சாம்பல் ஆகியது எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து - முழுமையாக எரிந்து சாம்பல் ஆகியது Reviewed by Vanni Express News on 6/05/2018 03:27:00 PM Rating: 5