ஆடைத் தொழிற்சாலையில் இரண்டு மாடி கட்டிடத்தில் தீ விபத்து

களுத்துறை, தொடங்கொட சந்தியில் அமைந்துள்ள இரண்டு மாடி கட்டிடத்தில் இன்று (11) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

மேல் மாகாண சபை உறுப்பினர் ஜகத் விதானாவுக்கு சொந்தமான ஒரு ஆடைத் தொழிற்சாலையிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தொடங்கொட பொலிஸார் மற்றும் களுத்துறை தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் சேத விபரங்களும் மதிப்பிடப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பில் தொடங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆடைத் தொழிற்சாலையில் இரண்டு மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஆடைத் தொழிற்சாலையில் இரண்டு மாடி கட்டிடத்தில் தீ விபத்து Reviewed by Vanni Express News on 6/11/2018 05:13:00 PM Rating: 5