130 பயணிகளுடன் வந்த ஶ்ரீலங்கன் விமானம் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட இருந்த ஓமானின் - மஸ்கட் நகரில் இருந்து வந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. 

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பகுதியில் இன்று காலை காணப்பட்ட அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இந்த விமானம் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டுள்ளது. 

அதிகாலை 4.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த யூ.எல் - 206 என்ற விமானம் அதிகாலை 5.20 மணிக்கு மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. 

இதன்போது இந்த விமானத்தில் 130 பயணிகள் இருந்ததாக ஶ்ரீலங்கன் விமான சேவையின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்தார். 

மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட பின்னர் விமானத்தில் இருந்த பயணிகளை இறங்க அனுமதிக்காத மத்தள விமான நிலைய அதிகாரிகள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பகுதியில் காலநிலை சீரானதும் மீண்டும் அந்த விமானத்தை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பியுள்ளனர். 

காலை 6.30 மணிக்கு மத்தள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 6.47மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுள்ளது.
130 பயணிகளுடன் வந்த ஶ்ரீலங்கன் விமானம் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது 130 பயணிகளுடன் வந்த ஶ்ரீலங்கன் விமானம் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது Reviewed by Vanni Express News on 6/01/2018 02:20:00 PM Rating: 5