FIFA 2018 - ஆர்ஜெண்டினா அணியை வீழ்த்திய குரேஏஷியா

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் டி பிரிவில் இடம் பிடித்துள்ள ஆர்ஜெண்டினா மற்றும் குரேஏஷியா அணிகள் மோதிக்கொண்டன. 

ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. போட்டி தொடங்கியதில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். 

இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் குரேஷியா வீரர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணியின் வீரர்கள் அடுத்தடுத்த இடைவேளையில் கோல் அடித்து தங்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 

குரேஏஷியா அணியின் அண்டி ரெபிக் 53வது நிமிடத்திலும், லூக்கா மாட்ரிக் 80வது நிமிடத்திலும், இவான் ராகிடிக் 91வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர். 

குரேஏஷியா வீரர்களின் ஆக்ரோஷ ஆட்டத்துக்கு முன் ஆர்ஜெண்டினா வீரர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால் போட்டியின் இறுதியில், குரேஏஷியா அணி ஆர்ஜெண்டினா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
FIFA 2018 - ஆர்ஜெண்டினா அணியை வீழ்த்திய குரேஏஷியா FIFA 2018 - ஆர்ஜெண்டினா அணியை வீழ்த்திய குரேஏஷியா Reviewed by Vanni Express News on 6/22/2018 04:48:00 PM Rating: 5