FIFA 2018 - ஸ்வீடன் அணியை தோற்கடித்த ஜேர்மனி

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் எப் பிரிவில் இடம் பிடித்துள்ள ஜேர்மனி மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதிக்கொண்டன. 

போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினார்கள். ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்வீடன் அணியின் ஒலா டொல்வானன் 32வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். 

உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஜேர்மனி தனது ஆக்ரோ‌ஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 48வது நிமிடத்தில் ஜேர்மனி அணியின் மார்கோ ரூயஸ் ஒரு கோல் அடித்தார். அதற்கு பிறகு ஆட்டத்தின் இறுதிவரை இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 

இதையடுத்து, கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் ஜேர்மனி அணியின் டோனி குருஸ் 95வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை 2-1 என முன்னிலைப்படுத்தினார். 

இறுதியில், போட்டியின் முடிவில் ஜேர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன் அடுத்த சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பையும் பெற்றது. 

உலககிண்ண கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான ஜேர்மனி பரபரப்பான ஆட்டத்தின் இறுதியில் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
FIFA 2018 - ஸ்வீடன் அணியை தோற்கடித்த ஜேர்மனி FIFA 2018 - ஸ்வீடன் அணியை தோற்கடித்த ஜேர்மனி Reviewed by Vanni Express News on 6/24/2018 10:41:00 PM Rating: 5