FIFA 2018 - ரஷ்யாவை வீழ்த்தி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய உருகுவே

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் ரஷ்ய அணிகள் மோதின. 

போட்டி தொடங்கியதில் இருந்தே உருகுவே அணி வீரர்கள் அபாரமாக விளையாடினர். ஆட்டத்தின் 10 வது நிமிடத்தில் உருகுவே அணியின் நட்சத்திர வீரர் சுவாரஸ் ஒரு கோல் அடித்தார். 

அவரை தொடர்ந்து ஆட்டத்தின் 23 வது நிமிடத்தில் உருகுவே அணி வீரர் டெனி ஷெரிஷேவ் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் உருகுவே அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. ஞ 

ரஷ்ய அணி வீரர்கள் எவ்வளவு முயன்றும் கோல் அடிக்க முடியவில்லை. 

இதை அடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 90 வது நிமிடத்தில் உருகுவே அணியின் எடின்சன் கவானி ஒரு கோல் அடிக்க 3-0 என முன்னிலை பெற்றது. 

கூடுதலாக கிடைத்த 5 நிமிடங்களிலும் ரஷ்ய அணி கோல் அடிக்கவில்லை. இறுதியில், ரஷ்யாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றதுடன் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
FIFA 2018 - ரஷ்யாவை வீழ்த்தி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய உருகுவே FIFA 2018 - ரஷ்யாவை வீழ்த்தி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய உருகுவே Reviewed by Vanni Express News on 6/26/2018 11:53:00 PM Rating: 5