கல்முனையில் பல கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்ட மீஸான் விருது விழா 2018

-கலைமகன்

அல் மீஸான் பௌண்டசன், ஸ்ரீலங்கா அமைப்பின் 14வது ஆண்டு நிறைவு விழாவும் இளம் தலைவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் 25ம் திகதி கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரியில் அல் மீஸான் பௌண்டசன் தலைவர் அல்ஹாஜ் நூறுல் ஹுதா உமர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வீ.இராதாகிருஷ்ணன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும்  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே அவர்களின் முஸ்லிம் விவகார பணிப்பாளர் சிராஸ் ஜுனூஸ், சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தூதுவரும்,சிம்ஸ் கேம்பஸ் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அன்வர் எம் முஸ்தபா,

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கௌரவ ஜெயசிரில். கல்வி அமைச்சின் கல்வி பணிப்பாளர் Z. தாஜுதீன்.கல்முனை மாநகர சபை உறுப்பினர் கௌரவ  ஏ.எல்.எம் .றிபாஸ், சமாதான கட்கைகள் நிலைய பணிப்பாளர் பேராசிரியர் எஸ்.எல்.ரியாஸ், கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் MS. அப்துல் ஜலீல்.

மீஸான் பௌண்டசன் நிகழ்ச்சி திட்டமிடல் அதிகாரி எம்.சி அகமட் புர்கான், குளோபல் ஸ்ரீலங்கா இஸ்தாபகர் வை.வீ.முஸ்தபா, மட்டக்களப்பு மாவட்ட கணனி பேரவை தலைவர் திரு மகேந்திரன், மட்டக்களப்பு வின்சிஸ் இயக்குனர் திரு எம். விக்கி, தே. கி.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுஷியா சேனாதிராஜா, உலக கனடிய பல்கலைக்கழக சேவைகள் சிரேஷ்ட நிகழ்ச்சி திட்டமிடல் அதிகாரி திரு. யேசு சாகாயம், போன்றவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 200 மாணவ தலைவர்கள் இந்நிகழ்வில்  சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.  
கல்முனையில் பல கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்ட மீஸான் விருது விழா 2018 கல்முனையில் பல கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்ட மீஸான் விருது விழா 2018 Reviewed by Vanni Express News on 6/26/2018 03:56:00 PM Rating: 5