ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றால் - அமெரிக்க குடியுரிமையை துறப்பேன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் என்னை போட்டியிடுமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதுவரை தனக்கு அறிவிக்கவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று (25) காலை வாக்குமூலம் ஒன்றை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றால், இரண்டு மாதங்களுக்குள் தனது அமெரிக்க குடியுரிமையை திரும்ப வழங்க தாயாராக இருப்பதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். 

மேலும் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், வணக்கத்துக்குரிய வென்டருவே உபாலி தேரரின் தலைமையில் தனது பிறந்த நாளுக்கு இடம்பெற்ற சமய நிகழ்வு, ஒரு தனிப்பட்ட விஷயம், இதை ஏன் இவ்வளவு பெரிதுபடுத்துகிறார்கள் என தெரியவில்லை எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். 
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றால் - அமெரிக்க குடியுரிமையை துறப்பேன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றால் - அமெரிக்க குடியுரிமையை துறப்பேன் Reviewed by Vanni Express News on 6/25/2018 07:27:00 PM Rating: 5