கொழும்பு ஸாஹிரா 94 குறூப்பின் இப்தார் நிகழ்வும் வருடாந்த பொதுக் கூட்டமும்

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் 94 குறூப் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து வருடாந்த பொதுக் கூட்டமும் சங்கத்தின் தலைவர் எஸ்.எம். றிபாய் மௌலானா தலைமையில் (05) செவ்வாய்கிழமை மாலை 5  மணிக்கு கொழும்பு - 02, ரமதா ஹோட்டலில் நடைபெற்றது.

இப்தாரைத் தொடர்ந்து இடம்பெற்ற வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது 94 குறூப்பின் புதிய தலைவராக அக்ரம் பாறூக் நியமிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் கல்லூரி அதிபர் றிஸ்வி மரிக்கார், கல்லூரியின் ஆளுனர் சபையின் தலைவர் பௌசுல் ஹமீத் மற்றும் எஸ்.எம். றிபாய் மௌலானா, புதிய தலைவர் அக்ரம் பாறூக் ஆகியோர் உரையாற்றினர்.

சங்கத்தின் தலைவராக இருந்து தனது தலைமைப்பதவியை புதிய தலைவரான அக்ரம் பாறூக்கிடம் கையளித்துவிட்டு எஸ்.எம். றிபாய் மௌலானா உரையாற்றும் போது,

நான் தலைவராக இருக்கம் காலங்களில் தன்னோடு பக்கபலமாக நின்று உழைத்த நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எங்களது கல்லூரி தற்போது நல்ல நிலையில் காணப்படுகின்றது. இந்தக் காலப்பகுதியில் நான் தலைமைப் பதவி வகித்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

அதிபர் றிஸ்வி மரிக்கார் மற்றும் கல்லூரியின் ஆளுனர் சபையின் தலைவர் பௌசுல் ஹமீத் ஆகியோர் என்னுடன் அதிகமாக கலந்தாலோசித்திருக்கிறார்கள். நான் கல்லூரிக்காக வேண்டிய உதவிகளைச் செய்து கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன்.

முஸ்லிம் சமுதாயத்துக்கு இருக்கின்ற ஒரே நல்ல கல்லூரிதான் கொழும்பு சாஹிரா. இக்கல்லூரியின் உயர்ச்சிக்காக உழைத்த பழைய மாணவர்களும் அவர்களின் தலைமைகளாக இருக்கின்ற நாங்களும் இன்னும் எங்களால் முடியுமான உதவிகளை கல்லூரிக்குச் செய்வதற்குத் திட்டங்களை வைத்திருக்கின்றோம்.   

விஷேடமாக இந்த உயர்ந்த நிலைக்கு எங்கள் கல்லூரி வந்ததுக்கு முக்கிய காரணம் ஆளுனர் சபையின் தலைவராக இருக்கின்ற பௌசுல் ஹமீத் ஆவார். அவர் ஆளுனர் சபைத் தலைவராக பொறுப்பேற்கும் போது, இந்தக் கல்லூரியை ஓர் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவதாக உறுதி தெரிவித்தார். அதேமாதிரி அவர் செயற்திட்டங்களை முன்னெடுத்துச் சென்று கல்லூரியை உயர்ந்த நிலைக்குச் கொண்டு வந்துள்ளார். அதற்கு விஷேடமாக அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என்று தெரிவித்தார்.

இதன் போது எஸ்.எம். றிபாய் மௌலானாவுக்கு அவரின் சேவையைப் பாராட்டி அதிபர் றிஸ்வி மரிக்காரினால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

நிகழ்வில் செயலாளர் அலவி முஸ்தாக், கல்லூரியின் ஏனைய பழைய மாணவர் குறூப் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், உலமாக்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கொழும்பு ஸாஹிரா 94 குறூப்பின் இப்தார் நிகழ்வும் வருடாந்த பொதுக் கூட்டமும் கொழும்பு ஸாஹிரா 94 குறூப்பின் இப்தார் நிகழ்வும் வருடாந்த பொதுக் கூட்டமும் Reviewed by Vanni Express News on 6/07/2018 03:16:00 PM Rating: 5