கண்டி வன்முறை - நான்கு பேர் பிணையில் விடுதலை - வௌிநாட்டுப் பயணம் மேற்கொள்ள தடை

கண்டி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5000 ரூபாவான ரொக்கப் பிணை மற்றும் 05 இலட்சம் ரூபா இரண்டு சரீரப்பிணையில் சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

அத்துடன் சந்தேகநபர்களுக்கு வௌிநாட்டுப் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஏனைய சந்தேகநபர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கண்டி வன்முறை - நான்கு பேர் பிணையில் விடுதலை - வௌிநாட்டுப் பயணம் மேற்கொள்ள தடை கண்டி வன்முறை - நான்கு பேர் பிணையில் விடுதலை - வௌிநாட்டுப் பயணம் மேற்கொள்ள தடை Reviewed by Vanni Express News on 6/22/2018 03:23:00 PM Rating: 5