இன்று நள்ளிரவு முதல் 31 ரூபாவால் மண்ணெண்ணெய் விலை குறைகிறது

இன்று (12) நள்ளிரவு முதல் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலையை 70 ரூபாவாக குறைக்க தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா கூறுகிறார். 

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவைக்கு தாக்கல் செய்வதாக அமைச்சர் கூறுகிறார். 

அதன்படி 101 ரூபாவாக இருக்கின்ற ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை 31 ரூபாவால் குறைக்கப்படுகிறது. 

இந்த விலைக்குறைப்புக்கு மீனவ சங்கங்கள் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நேற்று (11) மாலை மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சாவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் 31 ரூபாவால் மண்ணெண்ணெய் விலை குறைகிறது இன்று நள்ளிரவு முதல் 31 ரூபாவால் மண்ணெண்ணெய் விலை குறைகிறது Reviewed by Vanni Express News on 6/12/2018 02:42:00 PM Rating: 5