புத்தளம் தில்லையடி அமைச்சர் ரிசாட்டின் கோட்டைக்குள் மஸ்தான் M.P

-ஆர்.ரஸ்மின், இமாம் ரிஜா

புத்தளம் பாலாவி முல்லை ஸ்கீமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மக்தப் கட்டடம் வெள்ளிக்கிழமை (08) உத்தியோகப்பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான காதர் மஸ்தான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த மக்தப் கட்டடத்தை திறந்துவைத்தார்.

இதன்போது, புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரிபாஸ் நஸீர், இஸ்லாமிய நிவாரண அமைப்பு ( ISRC ) நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஏ. முஹம்மது மிஃலார், முல்லை ஸ்கீம் நூராணியா ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் முஹம்மது வதூத், பேஷ் இமாம் எச்.எம். ஹாரிஸ் ( நிழாமி) உட்பட உலமாக்கள், மக்தப் பொறுப்பாசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முல்லை ஸ்கீம் சிறுவர்களின் சன்மார்க்க அறிவினை மேம்படுத்துவதற்காக மக்தப் வகுப்பிற்கான கட்டடம் ஒன்றை நிர்மாணித்துக் கொடுக்குமாறு மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

முல்லை ஸ்கீம் மக்களின் வேண்டுகோளையடுத்து உடன் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், இஸ்லாமிய நிவாரண அமைப்பு (ISRC) நிறுவனத்தின் மூலம் கட்டார் செரிட்டியின் நிதி அணுசரணையில் இந்த மக்தப் கட்டடம் நிர்மாணிப்பத்துக் கொடுத்துள்ளார்.

இதேவேளை, முல்லை ஸ்கீம் மக்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த கிராமத்தில் அல்குர்ஆன் மத்ரஸாவுக்கான புதிய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல்லையும் பாராளுமன்ற உறுப்பினர் அன்றைய தினம் நாட்டி வைத்தார்.

அத்துடன், முல்லை ஸ்கீமில் புனரமைக்கப்படாமல் காணப்படும் உள்வீதிகளையும், சிறய பாலங்களையும் பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர், விரைவில் அவற்றையும் புனரமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் வாக்குறுதியளித்துள்ளார்.

அத்தோடு, நேற்று வெள்ளிக்கிழமை முல்லை ஸ்கீம் நூராணியா ஜூம்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற இப்தார் நிகழ்விலும் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புத்தளம் தில்லையடி அமைச்சர் ரிசாட்டின் கோட்டைக்குள் மஸ்தான் M.P புத்தளம் தில்லையடி அமைச்சர் ரிசாட்டின் கோட்டைக்குள் மஸ்தான் M.P Reviewed by Vanni Express News on 6/09/2018 03:41:00 PM Rating: 5